Monday, 11 May 2015

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தூரில் நேற்று கூறியதாவது:
விவசாயிகள் பாதிப்படையாத வகையில் காங்கிரஸ் ஆட்சியில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த முடியும்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 மே மாதம் பதவியேற்ற பிறகு இம்மசோதாவை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங் களைப் பறிக்க மசோதாவில் திருத்தங்களை செய்துள்ளது.
இதற்கு எதிராக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தரப்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்ற முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்றவுட னேயே நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை கடந்த ஆண்டு பிறப்பித்தது. ஆனால் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால் மீண்டும் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவுடன் கலந்தோலாசித்த பிறகே நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி அரசு, விவசாயி களின் நலனுக்கு விரோதமான மசோதாவை நிறைவேற்ற முயற் சிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment